கனடா (Canada) – டொரோண்டோ நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் டொரோண்டோவின் – ஸ்கார்போரோ (Scarborough) நகரத்திலுள்ள டவுன் செண்டரிலுள்ள கேளிக்கை விடுதியில் நேற்று (மார்ச் 7) இரவு இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் தீவிர விசாரணை
இந்நிலையில், அங்கு விரைந்த மீட்புப் படையினர் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்து வருவதாகவும், சுமார் 12 பேருக்கு லேசானது முதல் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிய குற்றவாளி யார் என்று இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் அந்த குற்றவாளியைப் பிடிக்க அந்நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து டொரோண்டோ ஆளுநர் ஒலிவியா சோவ் கூறுகையில், இந்த துயர சம்பவத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.