முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் 15 ஆவது ஆண்டாக எதிர்வரும் மே மாதம்-18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள்
மயப்படுத்த வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள்
வலியுறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் புனித தெரேசா தேவாலய முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை
(21.04.2024) மாலை 04 மணியளவில் சிவில்-சமூக அமைப்புக்களின் கலந்துரையாடல்
இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப்
பிரதிநிதிகள் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து
கொண்டிருந்தனர்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம் ஆரம்பம்!
பேரவலம்
இந்தக் கலந்துரையாடலில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15 ஆவது ஆண்டு
நினைவேந்தலைப் பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்தி
மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதன்போது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நினைவேந்தல் செயற்திட்டங்கள்
தொடர்பாகவும் கலந்து கொண்ட மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.
கலந்துரையாடலைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு
வலியுறுத்தியுள்ளனர்.
தங்கம் வாங்க காத்திருப்போருக்கான முக்கிய தகவல்: இன்றைய தங்க நிலவரம்
15 ஆவது ஆண்டாக நினைவு
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “முள்ளிவாய்க்கால் பேரவலம் 15 ஆவது ஆண்டாக நினைவு கூரப்படவிருக்கின்றது.
இந்த
நினைவேந்தல் மிகவும் முக்கியமானது. இந்த நினைவேந்தலை நாங்கள் பரவலாக்கம் செய்ய
வேண்டும். இந்த நினைவேந்தல் மூலம் மீள நிகழாமை உறுதி செய்யப்பட வேண்டும்.
காஸாவில் தற்போது இன்னுமொரு மனிதப் பேரவலம் அரங்கேற்றப்பட்டுக்
கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட அவலம் மீண்டும் நடைபெறாமலிருப்பதை மனதிலே கொண்டு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நாங்கள் முக்கியத்துவப்படுத்த வேண்டும்.
இந்த
நினைவேந்தல் நிகழ்வை ஒரு இடத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தி வைக்காமல் பரந்த
அளவில் எல்லோரும் இயல்பாக நினைவேந்தலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு
விடுக்கின்றோம்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு நீடித்த நினைவேந்தலாக, ஒரு இன அழிப்பின்
நினைவேந்தலாக எவ்வாறு மேற்கொள்ளலாம்? என்பதைக் கிராம மட்டப் பொது அமைப்புக்கள்
தீர்மானித்து முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
கனடாவில் புலம்பெயர்தலுக்கு சிறந்த 10 நகரங்கள்: வெளியானது பட்டியல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |