முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் அறிவிக்கப்பட்டதற்கமைய ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

புதன்கிழமை (24) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

திட்டமிட்டு பரப்பும் வதந்திகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் தொடர்பில் சிலரால் திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்படுவதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | 2026 Advanced Level Examination Announcement

ஆகஸ்ட் 10ஆம் திகதி பரீட்சைகளை நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதில் எவ்வித மாற்றங்களும் இல்லை. சிலரால் இந்த திகதிகள் குறித்து திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்படுகின்றன.

எனவே மாணவர்கள் பதற்றமடையவோ குழப்பமடையவோ தேவையில்லை. அதேநேரம் பரீட்சைகளைக் காலம் தாழ்த்துவதற்கு எந்தவொரு தகுதியான காரணமோ அல்லது தேவையோ கல்வி அமைச்சிற்கு இல்லை.

பாடசாலை நாட்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு தான் பரீட்சைகளுக்கான கால அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், திட்டமிட்டபடி இடம்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள்

இதேவேளை, க.பொ.த. உயர்தர பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் ஜூலை மாதம் விநியோகிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

அதேவேனை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9ஆம் திகதி இடம்பெறும். அதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Source: https://tamilwin.com/article/2026-advanced-level-examination-announcement-1782355180

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.