முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

23 டெங்கு அதி அபாய வலயங்கள் இலக்கு – மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட நடவடிக்கை

மேல் மாகாணத்திலுள்ள 23 டெங்கு அதி அபாய வலயங்களை உள்ளடக்கும் வகையில் இன்று (05) முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த விசேட நடவடிக்கை ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் ஒருங்கிணைப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. 

சுகாதாரப் பிரிவினர், முப்படைகள், பொலிஸார், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட பல அரச மற்றும் சமூகப் பிரதிநிதித்துவத் தரப்பினரின் கூட்டுப் பங்களிப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

டெங்கு ஒழிப்புக்காகப் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்குடன், மேல் மாகாணத்தின் 23 டெங்கு அதி அபாய வலயங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த கூட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 59,638 ஆகும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

இவர்களில் அதிகளவான நோயாளர்கள் கடந்த ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த நோயாளர்களின் எண்ணிக்கை 21,546 ஆகும். 

இதேவேளை, ஜூலை மாதத்தின் கடந்த 4 நாட்களில் மாத்திரம் 4,251 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதுடன், இதற்கமைய அந்த மாகாணத்தில் இருந்து 31,249 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

இதற்கு மேலதிகமாக, தென் மாகாணத்தில் 9,507 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,172 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

Source: https://samugammedia.com/23-dengue-high-risk-zones-targeted–special-measures-start-in-the-northern-province-from-today-1783226326

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.