முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

40 வருட கல்விச் சேவையிலிருந்து விடைபெற்ற இல்டனோல் தமிழ் வித்யாலய அதிபர் அன்னமேரி ஆறுமுகம்!

நான்கு தசாப்தங்கள் (40 ஆண்டுகள்) என்பது ஒரு மனித ஆயுளில் பெரும் பகுதி. அதனை முழுமையாகக் கல்விப் பணிக்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் அர்ப்பணிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அந்த வகையில், நுவரெலியா இல்டனோல் தமிழ் வித்தியாலயத்தில் நாற்பது வருடங்களாகத் தலைமுறைகளை உருவாக்கிய உன்னத கல்விப் பயணத்தை நிறைவு செய்து, அதிபர் அன்னமேரி ஆறுமுகம் அவர்கள் 04-06-2026  பணி ஓய்வு பெற்றார்.

பாடசாலை சமூகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அவர் எந்தளவுக்கு அன்பையும், மரியாதையையும் சம்பாதித்திருக்கிறார் என்பதற்கு, அவரது ஓய்வுபெறும் நிகழ்வின் போது சிதறிய கண்ணீர் விடைபெறல்களே சாட்சியாக அமைந்தன.

இவ்விழாவில் நுவரெலியா கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர்   டி. எஸ். திசாநாயக்கஅவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டமை, அதிபரின் நீண்டகால சேவைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். அத்தோடு, கோட்டக்கல்விப் பணிப்பாளர் வேணுகோபால சர்மா மற்றும் ஹட்டன் கோட்டம் மூன்றின் கோட்டக்கல்விப் பணிப்பாளர் மகேந்திரன் நுவரெலியா ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் திரு சேகர்  ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ரோகிணி சுப்பிரமணியம் (அதிபர், தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம்) ,அதிபர், கொட்டகலை தமிழ் மகா வித்தியா,அருள்ராஜன் அதிபர் – ஆதித்யா த.வி

செல்லதுரை (அதிபர், வட்டகொடை தமிழ் மகா வித்தியாலயம்),முரளிதரன் (அதிபர், ரஹன்வத்தை தமிழ் வித்தியாலயம்)விநாயகமூர்த்தி(அதிபர், ஃபாரம் தமிழ் வித்தியாலயம்) ஆகிய அதிபரின் உன்னத சேவைக்கு மதிப்பளிக்கும் வகையில் பிராந்தியத்தின் முன்னணி பாடசாலைகளின் அதிபர்கள் பலர் இந்நிகழ்வில் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

Source: https://samugammedia.com/annamary-arumugam-principal-of-iltanol-tamil-vidyalaya-bids-farewell-after-40-years-of-educational-service-1780652425

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.