இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக தென்னிந்திய சினிமாவில் வலம் வருகிறார் ருக்மிணி வசந்த். இவர் இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் அவருக்கு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகை ருக்மிணி வசந்த் குறித்து பலருக்கும் தெரியாமல் இருக்கும் 7 Facts குறித்துதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
ருக்மிணியின் தந்தை
ருக்மிணி வசந்தின் தந்தை கர்னல் வசந்த் வேணுகோபால். இவர்தான் கர்நாடகாவின் முதல் அசோக சக்ரா விருதை பெற்றவர். 2007ம் ஆண்டு அவரது துணிச்சலுக்காக, அவருடைய வீர மரணத்திற்கு பின் இந்த விருது வழங்கப்பட்டது.

ருக்மிணியின் தாய்
நடிகை ருக்மிணி வசந்தின் தாயார் சுபாஷினி வசந்த், ஒரு திறமையான பரதநாட்டிய நடன கலைஞர் ஆவார். மறைந்த தனது கணவரின் நினைவை போற்றும் வகையில், போர்களில் வீர மரணமடைந்தவர்களின் மனைவிகள் மற்றும் அவர்களது குடும்பங்களை ஆதரிப்பதற்காக அறக்கட்டளை நடத்தி வருகிறார்.

நடிப்பு பயிற்சி
லண்டனில் உள்ள புகழ்பெற்ற ராயல் அகாடமி ஆஃப் டிராமடிக் ஆர்ட்டில் தனது நடிப்பு திறனை மெருகேற்றிக்கொண்டார்.

சர்ஃபிங்
2023ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த பாணதரியால்லி (Baanadariyalli) படத்திற்காக நடிகை ருக்மிணி வசந்த் சர்ஃபிங் திறனை கற்றுக்கொண்டு, அதை படத்தில் சிறப்பாகவும் செய்தார்.

சாகரதாச்சே எல்லோ
கன்னடத்தில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்த ருக்மிணி வசந்தின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் சாகரதாச்சே எல்லோ (Sapta Sagaradaache Ello). இப்படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் அறியப்பட்ட நடிகையாக, விமர்சன ரீதியாக பல பாராட்டுகளை பெற்றார்.

பொழுதுபோக்குகள்
நடிப்பை தாண்டி, புத்தகம் வாசிப்பது, சமைப்பது, படங்கள் வரைவது போன்ற விஷயங்கள் தனது மனதிற்கு நிம்மதி தருவதாக உணர்கிறார் ருக்மிணி வசந்த்.

சினிமா பயணம், சம்பளம்
6 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் ருக்மிணி வசந்த் இன்று மோஸ்ட் வான்டட் நடிகையாக மாறியுள்ளார். இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 1 கோடி வரை சம்பளம் பெறுகிறார். மேலும் விரைவில் பாலிவுட் படத்தில் நடிக்க போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிடித்த உணவு
நெய், உப்பு மற்றும் ஒரு முட்டையுடன் சூடான சாதம் ருக்மிணி வசந்தின் விருப்பமான உணவுகளில் ஒன்றாகும் என்கின்றனர். மேலும், அவளுக்கு இளநீர் மிகவும் பிடித்த ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


