இலங்கை இராணுவத்தில் (Sri Lanka Army) இருந்து விலகியவர்களை உக்ரைன் – ரஷ்ய யுத்த களத்துக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தில் இருந்து விலகிய ஏராளமான சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகள் உக்ரைன் (Ukraine) மற்றும் ரஷ்ய (Russia) முன்னரங்க நிலைகளில் பாதுகாப்புக் கடமைகளுக்காக சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் : ஜனாதிபதி ரணில் உறுதி
மேலதிக விசாரணை
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் ஆட்களை அனுப்பி வந்துள்ள செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இராணுவ மேஜருக்கு உதவியுள்ள நபர்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்திய பொதுத் தேர்தல் 2024 – உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா ஆரம்பம்
ஈரானின் பாரிய இராணுவ தளம் , அணு மின்னிலையம் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |