முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய கனமழை: வெளியான எச்சரிக்கை

நாட்டின் வடக்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் இன்று (19) பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நாவில் இலங்கையருக்கு கிடைத்த உயர் பதவி

ஐ.நாவில் இலங்கையருக்கு கிடைத்த உயர் பதவி

காலை வேளையில் பனிமூட்டம்

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய கனமழை: வெளியான எச்சரிக்கை | Today Weather In Sri Lanka Heavy Rain With Thunder

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

இறந்தவரை வங்கிக்கு அழைத்து வந்து கடன்பெறமுயன்ற பெண் : வைரலாகும் காணொளி

இறந்தவரை வங்கிக்கு அழைத்து வந்து கடன்பெறமுயன்ற பெண் : வைரலாகும் காணொளி

கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக

புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று வீசக்கூடும்.

கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய கனமழை: வெளியான எச்சரிக்கை | Today Weather In Sri Lanka Heavy Rain With Thunder

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்

இதேவேளை வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று (19) அதிகரித்த வெப்பநிலை காணப்படும்“ என தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள் : உறங்கும் நேரத்திலும் மாற்றம்

சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள் : உறங்கும் நேரத்திலும் மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.