முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் இடைநிறுத்தப்பட்ட இலகு தொடருந்து திட்டத்தை மீள ஆரம்பம்பிக்க திட்டம்

Courtesy: Sivaa Mayuri

கொழும்பில் இடைநிறுத்தப்பட்டுள்ள இலகு தொடருந்து போக்குவரத்து திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry) தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய வெளியுறவு அமைச்சரை நேற்று(04.05.2024) கொழும்பில் சந்தித்த பின்னர் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மற்றுமொரு மோசடி அம்பலம் - வெளிநாட்டவர்களை ஏமாற்றிய கடைக்காரர்

இலங்கையில் மற்றுமொரு மோசடி அம்பலம் – வெளிநாட்டவர்களை ஏமாற்றிய கடைக்காரர்

நிபுணர் குழுவின் அறிக்கை

மேலும், முன்னதாக 203 ஜூலையில் இலங்கையின் அமைச்சரவை, இலகு தொடருந்து போக்குவரத்து திட்டம் தொடர்பில் கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான காலவரையறையை முடிவு செய்ய தீர்மானித்திருந்தது.

அத்துடன் அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையும் கோரப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று அமைச்சர் சப்ரி இலங்கை அரசாங்கத்தின் கருத்தை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இடைநிறுத்தப்பட்ட இலகு தொடருந்து திட்டத்தை மீள ஆரம்பம்பிக்க திட்டம் | Plan To Resume Suspend Rail Project In Colombo

எனினும் ஜப்பானிய யென் கடன்களை மறுசீரமைத்த பின்னரே அபிவிருத்தி கடன்கள் வழங்கப்படும் என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டில், கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இலகு தொடருந்து போக்குவரத்து அமைப்பு திட்டத்திற்கு 1,800 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி வழங்க ஜப்பான் அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்

ஜப்பானின் நிதியுதவி

மாலபேயில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலான முக்கியமான மற்றும் முக்கிய சந்திப்புகளை உள்ளடக்கும் வகையில் 16 நிலையங்கள் உட்பட 17 கிலோ மீட்டர் நீளமுள்ள உயர்தர தொடருந்து பாதையை அமைக்க திட்டமிடப்பட்டது.

எனினும் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகுதொடருந்து போக்குவரத்து திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டார்.

கொழும்பில் இடைநிறுத்தப்பட்ட இலகு தொடருந்து திட்டத்தை மீள ஆரம்பம்பிக்க திட்டம் | Plan To Resume Suspend Rail Project In Colombo

இலங்கையின் கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கையின் மூலம் இந்த தீர்மானத்தினால் மட்டும் நாட்டுக்கு 5.978 பில்லியன் ரூபாய் செலவாவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்தே இந்த திட்டம் கைவிடப்பட்டது.

2020 செப்டெம்பர் 21 ஆம் திகதி கோட்டாபயவுக்கு அப்போதைய செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தைத் தொடர்ந்து, இந்த திட்டம் பொருத்தமான செலவு குறைந்த போக்குவரத்து தீர்வாக இல்லை என்று குறிப்பிட்டு திட்டம் இடைநிறுத்தப்பட்டது.

ஜெய்க்கா என்ற ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், இந்த திட்டத்துக்காக, 12 வருட சலுகைக் காலம் உட்பட 40 வருட காலப்பகுதியில் கடனைச் செலுத்தும் வசதியை வழங்கியிருந்ததுடன் அதற்கான வருடாந்த வட்டி வீதம் 0.1 சதவீதமாகவும் நிர்ணயித்தமை குறிப்பிடத்தக்கது.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள மற்றொரு நாடு

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள மற்றொரு நாடு

பாகிஸ்தான் இராணுவம் என்னை கொலை செய்ய சதி : இம்ரான் கான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் இராணுவம் என்னை கொலை செய்ய சதி : இம்ரான் கான் குற்றச்சாட்டு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.