Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒப்பந்தம் குறித்து இலங்கை பிரதிநிதிகள் மற்றும் கடன் வழங்குநர்கள் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா, ஹங்கேரி மற்றும் பாரிஸ் கிளப் ஆகியவற்றை உள்ளடக்கிய உத்தியோகபூர்வ கடனாளர் குழுவினரும் இலங்கையின் அரசாங்க உறுப்பினர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவு பதிப்புகளை பரிமாறிக்கொண்டதாக ப்ளும்பேர்க் தெரிவித்துள்ளது.
திராவிட கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ள சீமான்
உத்தியோகபூர்வ தகவல்கள்
எனினும் இது தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த நவம்பர் மாதம் இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடனாளர் குழுவிற்கும் இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை இறுதி செய்யும் வகையிலான ஆவணப்பரிமாற்றங்களே தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.
சர்வதேச நாணய நிதியிலிருந்து 3 பில்லியன் டொலர் பிணை எடுப்பை பெறுவதற்கு இலங்கை இருதரப்பு கடன் வழங்குநர்கள் மற்றும் பத்திரதாரர்களுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதனை உறுதி செய்வதற்காக சர்வதேச நாணய நிதியம் ஒப்பந்தங்களை மதிப்பீடு செய்யும். இலங்கை அரசாங்க தரவுகளின்படி, இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கு இலங்கை 10.6 பில்லியன் டொலர்களை கடனாக செலுத்தவேண்டியுள்ளது.
அந்தக் கடனில் சீனாவுக்கு மாத்திரம் 40வீதத்துக்கும் அதிகமான தொகையை செலுத்தவேண்டியுள்ளது. இதனை தவிர இலங்கை அரசாங்கம், வெளிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் 12 பில்லியன் டொலர் கடனையும் மறுசீரமைக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
ரணிலுக்கு ஆதரவு வழங்கத் தயாராகும் சுதந்திரக் கட்சி
மேல் மாகாணத்தின் 36 பாடசாலைகளுக்கு விடுமுறை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |