இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் மோசடி செய்த நில்மினி என்ற பெண்ணை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கதிர்காமம், கோதமிகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் 1,689,000 ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும், வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை எனவும் நபர் ஒருவர் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பணியகத்திற்கு அழைத்து வாக்குமூலங்களை பதிவு செய்ததன் பின்னர் பணியக சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இதற்கமைய, சந்தேக நபர் இன்று (13) ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டின் ஊடாகவே இலங்கையர்களுக்கு இஸ்ரேலிய வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.
இதனடிப்படையில் வெளியாட்கள் எவரும் இதில் தலையிட முடியாது எனவும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு பணியகம் பொதுமக்களிடம் கோருகின்றது.
மேலும், பணியகத்தின் இணையதளமான www.slbfe.lk அல்லது 1989 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு அழைப்பதன் மூலம் வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் தகவல்களைப் பெறுமாறு பணியகம் மேலும் கேட்டுக்கொள்கின்றது.