முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுவரெலியாவில் பழமையான மரங்களை வெட்டுவதற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானம்

நுவரெலியா (Nuwara Eliya) கோல்ப் மைதானத்தில் மிகப்பழமையான 31 மரங்களை அழிக்க
முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக முறையான விசாரணைகள்
மேற்கொண்டு வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது என நுவரெலியா பிரதேச
செயலாளர் டீ,ஏ,பீ தலன்சூரிய தெரிவித்துள்ளார். 

நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான குறித்த வளாகம் கோல்ப் ஹோட்டலுக்கு
குத்தகை முறையில் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த பகுதியில் உள்ள மரங்களை
அகற்றி புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும், மரங்களினால் அதிக இலைகள்
கீழே விழுவதாகவும் கூறி நன்கு வளர்ச்சியடைந்த 31 மரங்களை வெட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 

சட்டவிரோத நடவடிக்கை 

அதற்காக, குறித்த மரங்களின் அடிப்பகுதியில்
உள்ள தோள்களை அகற்றி மரங்கள் பட்டுப்போவதற்கு தார் மற்றும் சில இராசாயனத்தை
கலந்து பூசப்பட்டுள்ளதாகவும் குறித்த மரங்கள் மீண்டும் துளிர்க்க
வாய்ப்பில்லை எனவும் (21) குறித்து பகுதிக்கு சென்ற உயர்அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனைகளில்தெரிய வந்துள்ளது. 

நுவரெலியாவில் பழமையான மரங்களை வெட்டுவதற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானம் | Prosecute Against Felling Of Trees In Nuwara Eliya

எனினும், அந்த மரங்களை அகற்றுவதற்கு முன்னதாக கடிதம் மூலம் அனுமதி
கேட்கப்பட்டதாகவும் இதனை மறுத்து மரங்களை வெட்டினால் அபராதம் விதிக்கப்படும்
என ஹோட்டல் உரிமையாளருக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டதாகவும்
விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாகவே
சூட்சுமான முறையில் மரங்களை அகற்றுவதற்கு குறித்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா மாநகர சபை, பிரதேச செயலகம் மற்றும் வன ஜீவராசிகள்
திணைக்களம் என இணைந்து ஹோட்டல் உரிமையாளர் சில சட்டங்களை மீறியிருப்பது உறுதி
செய்யப்பட்டமையால் விசாரணைகளை மேற்கொண்டு ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக
உச்ச நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் நுவரெலியா பிரதேச செயலாளர் டீ,ஏ,பீ தலன்சூரிய கூறியுள்ளார்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.