காய்ச்சலைப் போலவே இப்போது கொரோனாவும் சர்வசாதாரணமாகிவிட்டது.கொரோனா பரிசோதனைகள் முன்பு போல் நடத்தப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன(Asela Gunawardena) தெரிவித்துள்ளார்.
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இன்னமும் கொரோனா நோயாளிகள்
இருப்பினும், நாட்டில் கொரோனா நோயாளிகள் இன்னமும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் வேளையில் நாட்டில் விதிக்கப்பட்டிருந்த சுகாதார வழிகாட்டுதல்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா நோயாளிகள் சுய சுகாதாரப் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து சமூகத்தில் அமைதியாக இருப்பது முக்கியம் என்றும் அவர் கூறினார்.
காய்ச்சல், சளி போன்ற பொதுவான நோயாக
இந்த நோய் தற்போது உலகில் சாதாரணமாகிவிட்டதாகவும், இந்த நோய் காய்ச்சல், சளி போன்ற பொதுவான நோயாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.