இலங்கைக்கு (Sri Lanka) பயணம் செய்துள்ள அமெரிக்க (US) திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் (Robert Kaproth) சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய தரப்பினரை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுத்துள்ளார்.
இதன் போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னரும், இலங்கையின் பொருளாதார விவகாரங்களுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கு பயணம் செய்துள்ள அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் மற்றும் சிறிலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கிடையில்(Shehan Semasinghe) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கடன் மறுசீரமைப்பு
இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மை தற்போது சரியான திசையில் பயணிப்பதால், ஏனைய நாடுகள் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தமது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக இந்த சந்திப்பின் போது ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
It was my pleasure to meet with HE Robert Kaproth, Deputy Assistant Secretary of the Treasury for Asia and , US Ambassador to Sri Lanka, HE Julie Chung at the Ministry of Finance. On behalf of the government and people of Sri Lanka, I extended sincere gratitude and appreciation… pic.twitter.com/hKG09DVUHJ
— Shehan Semasinghe (@ShehanSema) July 1, 2024
அத்துடன், கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு, அமெரிக்க அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு அவர் இலங்கை சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்குமென ரொபர்ட் கப்ரோத் தெரிவித்துள்ளார்.
ரணில் – ரொபர்ட் கப்ரோத் சந்திப்பு
இதேவேளை, ரொபர்ட் கப்ரோத் மற்றும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
In our meeting with President @RW_UNP, @USTreasury’s Deputy Assistant Secretary Robert Kaproth and I commended Sri Lanka’s progress towards economic recovery. We acknowledged the ongoing challenges many Sri Lankans face and encouraged the government to deepen reforms that foster… pic.twitter.com/1Mh6gwudnX
— Ambassador Julie Chung (@USAmbSL) July 1, 2024
இலங்கையின் பொருளாதார மீட்சி பாதையில் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் (Julie J. Chung) தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவது தொடர்பில் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.