அரசாங்கம் வளிமண்டலவியல் திணைக்கள அத்தியட்சகரை பாதுகாப்பு அமைச்சில் ஒளித்து வைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
மறைத்து வைக்கப்பட்டுள்ள அத்தியட்சகர்
மேலும் தெரிவித்த அவர், ஏன் அவரை மறைத்து வைத்துள்ளீர்கள்.அத்தியட்சகரையும் ஊடகங்களையும் இணைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்.அவரை தனியாக வைத்து ஊடக அறிக்கைகளை பெற்று சரிபார்த்து ஜனாதிபதி ஊடக மையத்திற்கு அனுப்பப்பட்டு ஊடகங்களுக்கு தகவல் பரிமாறப்படுகிறது.

அதனால் எங்கயோ தவறு நடந்துள்ளது.அந்த தவறை மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.அந்த தவறை ஏற்றுக் கொண்டு முன்னோக்கி சொல்வோம்.ஏற்பட்ட மரணங்களுக்கு அரசு கட்டாயம் பொறுப்பேற்க வேண்டும்.
அவ்வாறு அரசாங்கம் தவறு செய்யவில்லை என்றால்,ஜனாதிபதி விசாரணைக் ஆணைக்குழுவை ஒன்றை அமைத்து விசாரணை நடத்துங்கள் என்றார்.

