இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka – CBSL) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் கடந்த நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன், ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் மொத்த பணயனுப்பல் 7.19 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
20.7 சதவீத வளர்ச்சி
இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 20.7 சதவீத வளர்ச்சியாகும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இலங்கையில் நேற்றைய தினம் (12) அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 305.32 ரூபாயாகவும் விற்பனை பெறுமதி 312.91 ரூபாயாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

