சுகவீன விடுமுறையில் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) பணிக்கு சமூகமளிப்பதில்லை என 200 இற்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
அவற்றில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் நில அளவை தொழிற்சங்கங்களும் அடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் 09ஆம் திகதி சுகவீன விடுமுறையில் பணிக்கு வருவதில்லை என அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களும் தீர்மானித்துள்ளன.
அடையாள வேலைநிறுத்தம்
இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (7) நள்ளிரவு முதல் நாளை (9) நள்ளிரவு வரை 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தபால் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதன் போது, இன்று (07) மாலை 4.00 மணி முதல் மத்திய தபால் பரிவர்த்தனையிலும், இன்று நள்ளிரவு முதல் அனைத்து தபால் நிலையங்களிலும் அடையாள வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.