கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இராம பிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினையும் மூர்த்தி.தலம்,தீர்த்தம் என்பவற்றை ஓருங்கே கொண்ட ஆலயம் என்ற பெருமையினையும் கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நேற்று(25) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இன்று காலை ஆலயத்தில் மூலமூர்த்திக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
வசந்த மண்டப பூஜை
அதனை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜை நடைபெற்று
இன்று வெள்ளிக்கிழமை பகல் 12.00மணியளவில் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்றம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
வருடாந்த மஹோற்சவத்தில் எதிர்வரும் 03ஆம் திகதி சனிக்கிழமை ஆலயத்தின் சித்திரத்தேர் உற்சவமும் 04ஆம் திகதி பிதர்க்கடன் தீர்க்கும் தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.
இம்முறை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருடாந்த மஹோற்சவத்தில் கலந்துகொள்வார்கள் என்ற அடிப்படையில் விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.