2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் (Paris 2024 Olympics) 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அருண தர்ஷன (Aruna Darshana) பங்கேற்க உள்ளார்.
குறித்த போட்டியானது, உள்ளூர் நேரப்படி இன்று (04) இரவு 10.35 மணிக்கு நடைபெற உள்ளது.
உலக தரவரிசையில் 51வது இடத்தில் உள்ள அருண தர்ஷன, ஆரம்ப சுற்றின் 05 வது கட்டத்தில் போட்டியிட உள்ளார்.
தனிப்பட்ட சாதனை
இந்த நிலையில், 400 மீற்றர் ஓட்டத்தில் அவரது தனிப்பட்ட சாதனை 45.30 வினாடிகள் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கரீபியன் தீவு மாகாணமான செயின்ட் லூசியாவைச் சேர்ந்த Julien Alfred நேற்று (03) உலகின் அதிவேகப் பெண்மணி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.
இது செயின்ட் லூசியா மாகாணம் வென்ற முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் என்ற வரலாற்றை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.