முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு! சி.எஸ்.கே அணியில் விளையாடுவாரா அஸ்வின்?

இந்தியா (India) – அவுஸ்திரேலியா (Australia) இடையே டெஸ்ட் தொடர் நடந்து வரும் நிலையில், இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) தொடரின் பாதியிலேயே நேற்றையதினம் (18.12.2024) அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் அஸ்வினை அணியில் எடுக்காததே அவர் ஓய்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின், ”எனக்கு மிகப்பெரும் வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றி.

உலகக்கோப்பை

இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. கடைசியாக 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றபிறகு வீடு திரும்பியதுபோது இதேபோல் வரவேற்பு இருந்தது.

கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு! சி.எஸ்.கே அணியில் விளையாடுவாரா அஸ்வின்? | International Cricket Ray Ashwin Spoken Spots

ஓய்வு முடிவை அறிவித்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.சில நாட்களாகவே ஓய்வு குறித்த எண்ணம் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. நிறைய வீரர்களுக்கு ஓய்வு முடிவை அறிவிப்பது கவளையாக இருக்கும்.

அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள். ஆனால் எனக்கு இது ஒரு பெரிய நிம்மதி மற்றும் திருப்தியை தருகிறது. நான் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்.

கிரிக்கெட் அகாடமி

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தான் ஓய்வு பெற்றுள்ளார்.

எனக்குள் இருக்கும் கிரிக்கெட் வீரர் இன்னும் ஓய்வு பெறவில்லை. என்னால் முடிந்தவரை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன்.

கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு! சி.எஸ்.கே அணியில் விளையாடுவாரா அஸ்வின்? | International Cricket Ray Ashwin Spoken Spots

ஐபிஎல்லில் சிஎஸ்கேவுக்காக விளையாட போகிறேன். டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறேன். 30 ஆண்டுகளாக கிரிக்கெட் அகாடமி நடத்தி வருகிறேன்.

19 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு வீரர்களிடம் கிரிக்கெட் அனுபவம் பயிற்சி, ஆலோசனையை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
 
முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்