Courtesy: Sivaa Mayuri
அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பொதுத்துறை பணியாளர்களுக்கான உத்தேச சம்பள அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை செலுத்துவதற்கு தேவையான 185 பில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்கப்படும் ஒதுக்கீடுகளுக்கான ஏற்பாடுகளை திறைசேரி மேற்கொண்டு வருகிறது.
இலங்கை தொடர்பான மீளாய்வு
முன்மொழியப்பட்ட அதிகரிப்பானது, ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட 10ஆயிரம் ரூபாய்க்கு சமனானதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருவாய் இலக்குகளை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, இந்த உத்தேச அதிகரிப்புகளை வழங்க முடியும் என்று திறைசேரி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தேர்தலை கருத்திற்கொண்டு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான மீளாய்வு, அடுத்த தவணைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.