மோகன்லால்
மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் மோகன்லால். 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து கொண்டிருக்கும் இவர் அடுத்ததாக ராம், பரோஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், 64 வயதாகும் நடிகர் மோகன் லால் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி திரையுலகினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சமந்தா இன்னும் நாக சைதன்யாவை மறக்கவில்லையா! வைரலாகும் புகைப்படம்
இதுதான் காரணம்
இதுகுறித்து மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் மோகன்லாலுக்கு சுவாச தொற்று இருப்பதாகவும், High Grade காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்றும் உடலில் வலிகள் ஏற்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளனர்.
மேலும் 5 நாட்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என்றும் கூட்ட நெரிசலான இடங்களை மோகன்லால் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.