முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டு வெளியானது

செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான (Presidential election) மாதிரி வாக்குச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) வெளியிட்டுள்ள மாதிரி வாக்குச் சீட்டானது ஒவ்வொரு வேட்பாளரின் பெயர் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னம் ஆகியவற்றைக் குறித்து நிற்கின்றது.

39 ஜனாதிபதி வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலில் முதலாவது வரிசை அக்மீம தயாரத்ன தேரருக்கு (Akmeemana Dayarathana Thero) வழங்கப்பட்டுள்ளதுடன் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) 37 ஆவது வரிசையைப் பெற்றுள்ளார்.  

ஒரே பெயரில் இரு வேட்பாளர்கள் 

மேலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) என்ற பெயருடைய இரு வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் இரு வேட்பாளர்களின் பெயர்களும் அடுத்தடுத்த இடங்களில் (31,32) குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டு வெளியானது | Model Ballot Paper Released Presidential Election

அத்துடன், இந்தப் பட்டியலில் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) பெயர் 16ஆவது இடத்திலும் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) பெயர்  21ஆவது இடத்திலும் இடம்பெற்றுள்ளது.

தமிழ் பொது வேட்பாளர்

இதேவேளை தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேத்திரத்தின் (P. Ariyanethiran) பெயர் 18 ஆவது இடத்தில் அமைந்துள்ளதுடன் 39 ஆவது இடத்தில் ஒஷல கேரத்தின் (Oshala Herath) பெயர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டு வெளியானது | Model Ballot Paper Released Presidential Election

இதற்கமைய ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கானி கல்பனி லியனகே (Kalpani Liyanage) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்னும் ஓரிரு நாட்களில் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி நிறைவடையும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.