முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்னாள் ஜனாதிபதிகளின் ஆடம்பர இல்லங்கள் : அம்பலப்படுத்திய அநுர

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆடம்பர உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலங்களினால் அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க (Chandrika Kumaratunga) அரசாங்கம் வழங்கிய வீட்டிலேயே வசிக்கின்றார். அந்த வீட்டின் மாதாந்த வாடகை பெறுமதி 2 மில்லியன் ரூபா என சுட்டிக்காட்டியுள்ளார்.

 மகிந்த ராஜபக்ச வசிக்கும் வீடு

அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் (Maithripala Sirisena) 0.9மில்லியன் ரூபா வாடகை பெறுமதியுடைய இல்லத்தில் வசிக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) வசிக்கும் வீட்டின் வாடகை பெறுமதி மாதம் 4.6 மில்லியன் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் ஆடம்பர இல்லங்கள் : அம்பலப்படுத்திய அநுர | Cost Of Residenses Of Sl Former Presidents Anura

எனினும் சில தலைவர்கள் தங்களிற்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை மீள ஒப்படைத்துள்ளனர் எனவும் அரசாங்கம் வழங்கிய இல்லத்தினை ஏற்க மறுத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) நன்றியை தெரிவித்துள்ளார்.

இல்லத்தை கையளித்த கோட்டாபய

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தனது உத்தியோகபூர்வ இல்லத்தை சமீபத்தில் மீள கையளித்துள்ளதுடன் முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாசவும் (Hema Premadasa) தனக்கு வழங்கப்பட்ட வீட்டை சில காலத்திற்கு முன்னர் திருப்பி ஒப்படைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் ஆடம்பர இல்லங்கள் : அம்பலப்படுத்திய அநுர | Cost Of Residenses Of Sl Former Presidents Anura

இதேவேளை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை வழங்குவதை அரசாங்கம் விலக்கிக்கொள்ளுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அரசியல் பிரமுகர்களிற்கான தேவையற்ற செலவீனங்களை குறைப்பது குறித்து அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.