ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் மிக ஆபத்தான நிலையை இலங்கை நெருங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் இந்தியா எவ்வித நிலைப்பாடும் இன்றி, அறிவுப்பூர்வமான வேட்பாளர்களை மறைமுகமாக தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
அதாவது றோவின் புலனாய்வு அறிக்கை வாரம் வாரம் இந்தியாவிற்கு அனுப்பப்படும் நிலையில், அவற்றில் அனுரவிற்கு எதிரான பல தகவல்கள் டெல்லிக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தலில் அனுர குமார திசாநாயக்க வெற்றிப்பெறும் பட்சத்தில் அவர் சீனாவின் பக்கம் தாவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக றோவின் புலனாய்வு அறிக்கை டெல்லிக்கு சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய ஜனாதிபதியின் தெரிவு தொடர்பில் இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் எமது ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்துகொண்டு பல விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,