அன்று மக்கள் படும் துன்பங்களைக் கண்டு இரக்கமில்லாமல் தப்பியோடி, ஒழிந்த
சஜித் பிரேமதாஸவுக்கும், அனுரகுமாரவுக்கும் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி
வாக்குகளினால் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டரங்கில் நேற்று(23) பிற்பகல் நடைபெற்ற
“இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி
இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரசைப் பொறுப்பேற்றவுடன் விவசாயிகளுக்கு உரம்
வழங்குவதே தான் செய்த முதல் காரியம் என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த 4
போகங்களையும் வெற்றியடையச் செய்ததன் மூலம் நாட்டில் நெல் உற்பத்தியை
அதிகரித்து வயல்களையும் சமையலறைகளையும் நிரப்பியதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், முஸ்லிம்களின் ஜனாஸாகளை விருப்பியோர்
நல்லடக்கம் செய்யவும், தகனம் செய்யவும், மருத்துவ பீடத்திடம் ஒப்படைக்கவும்
முடியுமான வகையில் புதிய சட்டங்களைக் கொண்டு வருவது தொடர்பான சட்ட வரைவு
அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,