மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதோடு தேசிய மக்கள் சக்தி அரசின் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனனர்.
அதில் பெண்ணொருவரின் பெயரும் உச்சரிக்கப்படுகின்றது.
இந்தநிலையில்,
குறித்த சர்சையில் சிக்கிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபுவின் உறவினர் என்று குறித்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்தாக மட்டக்களப்பு மாநகரசபையினுடைய பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார் குறிப்பிட்டார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
டிட்வா புயலின் பின்னரான நிவாரண நடவடிக்கைகளில் பெரும் இழுபறி நிலை காணப்படுகின்றது.
ஜனாதிபதி ஒரு விடயத்தை அறிவித்திருந்த நிலையில், அதனை தொடர்ந்து பிரதேச செயலகங்களில் நடைபெறும் விடயம் வேறாக உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அதாவது குறித்த பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினருடைய உறவினர்கள் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே கடந்தகால அரசாங்கங்களை போலவே இவர்களும் செயற்படுகின்றார்கள் என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் என குறிப்பிட்டார்.
இந்தவிடயங்கள் தொடர்பில் விரிவான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காணவும்..

