முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை விரைந்துள்ள இந்திய மற்றும் சீன போர் கப்பல்கள்: காரணம் என்ன..!

இந்தியக் கடற்படையின் (Indian Navy) முன்னணி போர்க்கப்பலொன்று இன்று இலங்கையை (Sri Lanka) வந்தடைந்துள்ள நிலையில், மூன்று சீன (China) போர்க் கப்பல்களும் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளன.

இதன்படி, சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் கப்பல்களான HE FEI, WUZHISHAN மற்றும் QILIANSHAN ஆகிய மூன்று போர்க் கப்பல்களும் இன்று (26) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் சர்வதேச ரீதியில் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரே வாரத்தில் இலங்கைக்கு மூன்று அமெரிக்க போர்க் கப்பல்கள் விரைந்தன.

சீன கப்பல்கள்

இந்த நிலையில், சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் போர்க்கப்பல்களான HE FEI, WUZHISHAN மற்றும் QILIANSHAN ஆகிய மூன்று போர்க் கப்பல்களும் நாட்டுக்கு வருகை தந்துள்ளன.

இலங்கை விரைந்துள்ள இந்திய மற்றும் சீன போர் கப்பல்கள்: காரணம் என்ன..! | Indian And Chinese Warships Rushed To Sri Lanka

இந்த கப்பல்களை சிறிலங்கா கடற்படையினர் கடற்படை கலாச்சரங்களுக்கு ஏற்ப வரவேற்றுள்ளனர்.

இதன்படி, 144.50 மீட்டர் நீளமுள்ள HE FEI எனும் கப்பல் 872 பணியாளர்களுடனும், WUZHISHAN மற்றும் QILIANSHAN எனும் 210 மீட்டர் நீளமுள்ள கப்பல் 872 மற்றும் 334 பணியாளர்களுடன் இலங்கையை வந்தடைந்துள்ளன.

நாடுகளுக்கிடையிலான நட்புறவு

சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் முப்படை போர்க்கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் இன்று நாட்டின் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை சந்தித்துள்ளனர்.

இலங்கை விரைந்துள்ள இந்திய மற்றும் சீன போர் கப்பல்கள்: காரணம் என்ன..! | Indian And Chinese Warships Rushed To Sri Lanka

இரண்டு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில், சிறிலங்கா கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் நிகழ்ச்சிகளில் இந்தக் கப்பல்களில் இலங்கையை சென்றடைந்துள்ள பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், இந்த கப்பல்களில் வந்தடைந்த பணியாளர்கள் கொழும்பில் தங்கியிருக்கும் போது, நாட்டின் சில சுற்றுலாத் தலங்களுக்கு பயணம் செய்வார்கள் எனவும் சிறிலங்கா கடற்படை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று கப்பல்களும் எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்கையிலிருந்து வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.