முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல் கடமைக்காக குவிக்கப்படவுள்ள காவல்துறை : வெளியானது அறிவிப்பு

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக 54,000 காவல்துறை உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சங்க கரவிட்ட தெரிவித்தார்.

பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று 29ஆம் திகதி நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வாக்களிப்பு நிலையங்கள்

13,000 இற்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 45 இற்கும் அதிகமான வாக்கு எண்ணும் நிலையங்கள் மற்றும் 3200 நடமாடும் வாகனங்கள் தேர்தல் காலத்தில் செயற்படுத்தப்படுவதற்கு காவல்துறை உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கரவிட்ட தெரிவித்தார்.

தேர்தல் கடமைக்காக குவிக்கப்படவுள்ள காவல்துறை : வெளியானது அறிவிப்பு | 54000 From The Police For Poll Work

சட்டவிரோத சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்காக 1500 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத கட்அவுட்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டவிரோத சுவரொட்டிகள்

1,69,358 சட்டவிரோத கட்அவுட்கள் அகற்றப்பட்டதுடன், 61,062 சட்டவிரோத சுவரொட்டிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

613 சட்டவிரோத பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், 510 சட்டவிரோத பதாகைகள் காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சங்க தெரிவித்தார்.

தேர்தல் கடமைக்காக குவிக்கப்படவுள்ள காவல்துறை : வெளியானது அறிவிப்பு | 54000 From The Police For Poll Work

766 சட்டவிரோத கட்அவுட்கள் அகற்றப்பட்டுள்ளதுடன், 793 கட்அவுட்கள் காவல்துறை காவலில் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் 2351 சட்டவிரோத விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், 6336 வழக்குகள் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கரவிட்ட தெரிவித்தார்.

வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு

முப்பத்தெட்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் புலனாய்வு அறிக்கைகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு அறிக்கைகளின்படி ஒவ்வொரு வேட்பாளருக்கும் உள்ள அச்சுறுத்தல்களின் அடிப்படையில் அவர்களின் நேரடி பாதுகாப்பிற்காக 260 காவல்துறை உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கரவிட்ட தெரிவித்தார்.

தேர்தல் கடமைக்காக குவிக்கப்படவுள்ள காவல்துறை : வெளியானது அறிவிப்பு | 54000 From The Police For Poll Work

சில அச்சுறுத்தல்களுடன் வேட்பாளர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு காவல்துறை பாதுகாப்பை வழங்குவதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அசங்க கரவிட்ட மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.