சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக சாமரசம்பத் தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (14.12.2025) சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற உயர் மட்டக் குழு கூட்டத்தில் பல முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கட்சியின் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குறித்த பல நியமனங்கள் வழங்கப்பட்டன.
விஜேயதாச ராஜபக்ஷ-பைசர் முஸ்தபா
அத்தோடு கட்சியில் இருந்து விலகியிருந்த விஜேயதாச ராஜபக்ஷ மீண்டும் கட்சியில் இணைத்து கொள்ளப்பட்டு அவருக்கு கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.

அதற்கு அடுத்தப்படியாக கட்சியில் பிரதித் தலைவராக பைசர் முஸ்தபா நியமிக்கப்பட்டார்.
கூட்டத்தில் உரையாற்றி கட்சியின் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா,
கட்சியின் யாப்பு சீர்திருத்தம்
விஜேயதாச ராஜபக்ஷவை கட்சியில் மீள இணைத்துக் கொள்வதற்கு பைசர் முஸ்தபா பெரும் பங்காற்றினார்.தனக்கு வழங்கப்பட்டிருந்த கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பதவியைக் கூட வழங்குமாறு தெரிவித்தார்.

அவருக்கு நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் கட்சியின் யாப்பு சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இதன் சீர்திருத்தத்தை நான் தான் செய்திருக்கிறேன்.
அது தொடர்பில் உயர் பீடம் ஆராய்ந்து அனுமதி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.தலைவருக்கு இருந்த சர்வாதிகார பலம் நீக்கப்பட்டுள்ளது.
இந்த கட்சியை கட்டியெழுப்பி எதிர்கால இளைய தலைமுறையினருக்கு வழங்குவதே எனது நோக்கம் என்று தெரிவித்தார்.

