முன்னாள் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துக் கட்சியின் பொதுச் செயலாளருமான முருகேசு சந்திரகுமார், 2024 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.
சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி தலைமை அலுவலகத்தில் இன்று(02) இடம்பெற்ற விசேட சந்திப்பையடுத்து அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் ஆகியோர் இடையே சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி தலைமை அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஊடக சந்திப்பு
இதன்பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், சஜித் பிரேமதாசவுடன் தமிழ் மக்கள் தொடர்பில் மேற்கொண்ட உரையாடலின் பின்னர் வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முடிவு தமது கட்சியின் உறுப்பினர்கள் அனைவருடனும் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.