முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் உயர் நீதிமன்றுக்கு! PTA தொடர்பில் கேள்வி

நீதியமைச்சினால் பயங்கரவாதத்தில் இருந்து இராச்சியத்தை பாதுகாக்கும் சட்டத்தை உருவாக்கும் வகையிலான சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது என மக்கள் போராட்ட அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் உள்ளடக்கம் முழுமையாக இந்த சட்டவரைவிலும் காணப்படுகிறது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தற்போது உயர்நீதிமன்றம் செல்வார்களா எனவும் போபகே கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பயங்கரவாத தடைச்சட்டம்

”பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துக் செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டே ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருவார்கள்.

அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் அதனை மறந்து விடுவார்கள்.

2023 ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.

பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் உயர் நீதிமன்றுக்கு! PTA தொடர்பில் கேள்வி | Pm And Foreign Minister To The High Court

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் பாரதூரமானதாக காணப்பட்டது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் முழுமையாக மீள வேண்டும் என்று கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

நீதியமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத சட்டமூலத்தில் இருந்து இராச்சியத்தை பாதுகாக்கும் சட்டத்தை உருவாக்கும் வகையிலான சட்டவரைவில் 2023 ஆம் ஆண்டு கொண்டு வந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் உள்ளடக்கம் முழுமையாக இந்த சட்டவரைவிலும் காணப்படுகிறது” என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.