முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு திறைசேரி மற்றும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (
Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய வெறும் ஆவணம் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு (Colombo), பிளவர் வீதியில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், “இந்த நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட 2022 ஆம் ஆண்டளவில், 13 இலட்சத்து எண்பதாயிரம் அரச ஊழியர்கள் இருந்தனர்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சர் வெளியிட்ட தகவல் | Govt Employee Salary Hike Plan

அவர்களுக்கான சம்பளம், 95 பில்லியன் ரூபாவாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சராக பதவியேற்கும் போது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை காணப்பட்டது. அதன்படி, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

 2023 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் திறைசேரியுடன் நடத்திய கலந்துரையாடலின் போது அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டார். ஆனால் அப்போது திறைசேரியால் சாதகமான பதில் அளிக்க முடியவில்லை.

ஆனால் இவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடியின்போது அதற்கு முகம்கொடுக்கும் மக்களில் பிரதானமாக பாதிக்கப்படுவது நிலையான வருமானம் பெறும் அரச ஊழியர்களே என ஜனாதிபதி மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினார்.

சம்பள முரண்பாடு

அரச சேவையில் சம்பள முரண்பாடு, ஓய்வூதிய வேறுபாடு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பது போன்ற பிரச்சினைகள் அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளாக இனங்காணப்பட்டுள்ளன. இதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உதய ஆர். செனவிரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சர் வெளியிட்ட தகவல் | Govt Employee Salary Hike Plan

இந்தக் குழுவினால் வழங்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. 18 பரிந்துரைகளுக்கு அமைச்சர்கள் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.  

2025ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி, அரச சேவையின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை இருபத்தைந்தாயிரம் ரூபாவாக அதிகரிப்பது, குறைந்தபட்ச ஆரம்ப மாதச் சம்பளத்தை 24% இல் இருந்து 50% ஆக அதிகரிப்பது, அவர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை ஐம்பத்தைந்தாயிரம் ரூபாவாக அதிகரிப்பது என்பன பிரதான பரிந்துரைகளாக இருந்தன.

அதன்படி, உத்தியோகத்தர்களுக்கு இந்த நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கும் அதேவேளையில், அரச சேவையின் வினைத்திறனை அதிகரிப்பது மற்றும் ஆட்சேர்ப்பு முறையை மேலும் வினைத்திறனாக்குவது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம்.’’ என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.