நெப்போலியன்
சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். இவர் புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் வில்லனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பின் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துக்கொண்டார்.
பிறகு, தனது மகன் தனுஷிற்காக சினிமாவை விட்டு விலகி இருந்தார் நெப்போலியன்.
GOAT படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
நெப்போலியன் பேட்டி
இந்த நிலையில், ஒரு பேட்டியில் எஜமான் படத்தில் வில்லனாக நடித்த அனுபவத்தை பற்றி நெப்போலியன் பகிர்ந்துள்ளார்.
அதில், எஜமான் படத்தில் வில்லனாக நடித்தது என் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படம் தான் எனக்கு சினிமாவில் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது.
ஆனால், அந்த படத்தில் நான் வில்லனாக நடிக்கப்போகும் தகவல் அறிந்து ரஜினிகாந்த் அவர் இப்போது தான் வளர்ந்து வரும் நடிகர் அவருக்கு இதுபோன்ற வயது முதிர்ந்த கேரக்டர் கொடுத்தால் அது நன்றாக இருக்குமா என்று கேட்டார்.
அதற்கு, இயக்குனர் இல்லை இந்த கேரக்டர் நெப்போலியனுக்கு சரியாக இருக்கும் என்று கூறினார்.
அதன் பின், இந்த படம் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த பிறகு, ரஜினி எனக்கு போன் செய்து என்னைவிட நீங்கள் மிகச்சிறப்பாக நடித்து இருக்கிறீர்கள் கண்டிப்பாக இதன்மூலம் உங்களுக்கு நல்ல பிரபலம் கிடைக்கும் என்று சொன்னார் என நெப்போலியன் கூறியுள்ளார்.