முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தவுடன் அநுரகுமார திசாநாயக்க வழங்கிய உறுதி

அனைத்து நாடுகளுடனும் மற்றும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொதுக் கொள்கையுடன் செயற்படுவதாக இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதி வழங்கியுள்ளார்.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று காலை (23.09.2024) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப் பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றிருந்தது.

புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தவுடன் அநுரகுமார திசாநாயக்க வழங்கிய உறுதி | Inauguration Of New President Anura

இதனை தொடர்ந்து உரையாற்றும் போதே அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், தேர்தலை நடத்துவதும், ஜனாதிபதியை தெரிவு செய்வது மாத்திரம் ஜனநாயகமல்ல.

எனது ஆட்சியில் ஜனநாயகத்தை முறையாக பாதுகாப்பேன்.

புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தவுடன் அநுரகுமார திசாநாயக்க வழங்கிய உறுதி | Inauguration Of New President Anura

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பையும், அவரது அரசியல் வகிபாகத்தையும் மதிக்கிறேன்.

சவால்மிக்க பொருளாதார சூழலில் ஆட்சியை பொறுப்பேற்றுள்ளேன்.

அனைவருடனும் ஒன்றிணைந்து பயணிப்போம்.

நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது. அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொதுக் கொள்கையுடன் செயற்படுவேன் என குறிப்பிட்டுள்ளார். 

புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தவுடன் அநுரகுமார திசாநாயக்க வழங்கிய உறுதி | Inauguration Of New President Anura

இரண்டாம் இணைப்பு

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அவர் தனது விசேட உரையை நிகழ்த்தியுள்ளார். 

இந்த நிலையில் அநுரகுமார திசாநாயக்கவின் ஆதரவாளர்கள் பலர் காலிமுகத்திடல் பகுதியில் திரண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தவுடன் அநுரகுமார திசாநாயக்க வழங்கிய உறுதி | Inauguration Of New President Anura

புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தவுடன் அநுரகுமார திசாநாயக்க வழங்கிய உறுதி | Inauguration Of New President Anura

முதலாம் இணைப்பு

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அநுரகுமார திசாநாயக்க இன்னும் சில நிமிடங்களில் இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.

இன்று (23.09.2024) காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அவர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கை கடந்த 21ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை நான்கு மணி வரை இடம்பெற்றிருந்தது.

வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

இந்த நிலையில் மாலை நான்கு மணிக்கு பின்னர் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து நள்ளிரவு முதல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் மாலை வரையிலான காலப்பகுதி எதிர்ப்பார்ப்பின் உச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. 

இவ்வாறான சூழலில் நேற்று இரவு இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் இன்றைய தினம் அவர் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.