நாட்டின் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தாயாரின் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ் குமாரசிறி குற்றம் சாட்டியுள்ளார்.
அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில், “அநுரவின் தாயாரது குறித்த வீடு தற்பொழுது மூடப்பட்டுள்ள நிலையிலும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை நீக்குதல், காலி முகத்திடலில் வாகனங்களை காட்சிப்படுத்தல் ஆகிய அனைத்தும் அரசியல் கண்காட்சி நடவடிக்கை மாத்திரமே.
தமக்கு அரசியல் ரீதியாக யாரிடமிருந்தும் அச்சுறுத்தல்கள் இல்லாத போதிலும் அநேகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றது.
இந்நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்தின் கடமை என்பதுடன், ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.