இராஜதந்திர உறவுகளில் அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் சமநிலையான முறையில் செயற்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா, சீனாவுடனான இலங்கையின் உறவு
இந்தியாவுடன்(india) வர்த்தகம் செய்வது போல் சீனாவுடனும்(china) வர்த்தகம் செய்து வருகிறோம்.“நாம் உண்மையில் எந்த நாட்டையும் பிரித்துப் பார்க்கவில்லை. நாடு சிறியதோ பெரியதோ என்று பார்க்காமல் அனைத்து நாடுகளுடனும் இலங்கை இராஜதந்திர உறவுகளை சமநிலையில் பேணுகிறது.
எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, கியூபா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளோம்.
இந்தியாவைப் போலவே சீனாவையும் கையாளுகிறோம். கோவில்களுக்கு சோலார் பேனல்களை வழங்கும் திட்டம் சீனாவில் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.