அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் இரு இளம் வீரர்களை சென்னை சுப்பர்கிங்ஸ் அணி கடும் போட்டிக்கு மத்தியில் வாங்கியுள்ளது.
இதுவரை ஐ.பி.எல் தொடர்களில் பங்கேற்காத மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரு வீரர்களையே சென்னை அணி தனதாக்கியுள்ளது.
பிரசாந்த் வீர் – கார்த்திக் சர்மா என்ற இரு சகலதுறை வீரர்களை சென்னை அணி ஏலத்தின் மூலம் தக்கவைத்துள்ளது.
பிரசாந்த் வீர்
பிரசாந்த் வீர் என்ற இளம் சகலதுறை வீரர் முதல் முறையாக 2026 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளார்.

20 வயதான இவர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராவார்.
இவர் இதுவரை விளையாடிய 12 டி20 போட்டிகளில் தனது திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
அபுதாபியில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல் 2026 ஏலத்தில் பிரசாந்த் வீரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14.20 கோடிக்கு வாங்கியுள்ளது. ஐ.பி.எல் ஏல வரலாற்றில் வீர் இப்போது மிகவும் விலையுயர்ந்த வீரராக மாறியுள்ளார்.
வீர் ஏழு டி20 போட்டிகளில் 167.16 சராசரியுடன் அதிகபட்சமாக 112 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
மேலும் ஒன்பது போட்டிகளில் 6.45 ஆர்.பி.ஓ சராசரியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக வீர் களமிறங்க வாய்ப்புள்ளது.
கார்த்திக் சர்மா
மேலும், அபுதாபியில் நடந்த ஐ.பி.எல் 2026 ஏலத்தில் விக்கெட் காப்பாளர் கார்த்திக் சர்மாவை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.14.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.

உள்நாட்டு தொடர்களில் குறிப்பாக சையத் முஷ்டாக் அலி தொடரில் தனது சிறப்பாக செயற்பட்டதன் மூலம் 160 க்கும் மேற்பட்ட சராசரியில் 133 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுள்ளார்.
12 ஆட்டங்களை கொண்ட அவரது குறுகிய டி20 போட்டிகளில் 160 சராசரியை கொண்டுள்ளார்.
அகில் உசைன்
சென்னை அணி இதுவரையில் பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரரான அகில் உசைன் ஆகியோரை வாங்கியுள்ளது.
மேலும் இன்றைய ஏலத்தில், இலங்கை வீரரான வனிந்து ஹசரங்கவை ரூ. 2 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி தனதாக்கியுள்ளது.
இந்த ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 18 கோடி ரூபாய்க்கு (சுமார் 2.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனவை வாங்கியுள்ளது. ஐ.பி.எல் ஏலத்தில் எடுக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த இலங்கை வீரரானார்.
அத்தோடு இன்றைய ஏலத்தில் கேம்ரூன் கிரீன் 25 கோடிக்கு அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை கொல்கத்தா அணி தனதாக்கியுள்ளது.

