முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் நியூஸிலாந்துக்கு முதல் வெற்றி!

2025- 27 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தெரிவு போட்டிகளில் நியூஸிலாந்து தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று நிறைவடைந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

குறித்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 9 விக்கெட்களால் மிக இலகுவாக நியூஸிலாந்து அணி வென்றுள்ளது.

நியூஸிலாந்தின் டெஸ்ட் அணி

நியூஸிலாந்தின் டெஸ்ட் அணியில் அறிமுகமான ஜேக்கப் டவி, இந்தத் தொடரில் இரண்டாவது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

கடந்த புதன்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் நியூஸிலாந்துக்கு முதல் வெற்றி! | Nz First Win Test Championship Series

ப்ளயா டிக்னர், மைக்கல் ரே ஆகிய இருவரும் திறமையாகப் பந்துவீசி மேற்கிந்தியத் தீவுகளின் விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 9 விக்கெட்களை இழந்து 278 ஓட்டங்களைப் பெற்று தனது முதலாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பின்னிலையில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, இரண்டாவது இன்னங்ஸில் ஜெக்கப் டபியின் பந்துவீச்சில் 128 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து 56 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து ஒரு விக்கெட்டை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.