ஐ.சி.சி தரவரிசையில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளனர்.
சமீபத்திய தரவரிசை புள்ளி பட்டியலின்படி குறித்த இடங்களை அவர்கள் பெற்றுள்ளனர்.
இந்திய தலைமைப் பயிற்சியாளர் கௌத்தம் கம்பீர் மீதான விமர்சனங்கள் தற்போது வலுத்து வரும் நிலையில் இந்த இடங்களை குறித்த இரு வீரர்கள் பெற்றுள்ளமை அவருக்கு வழங்கிய பதிலடி என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.
சமீபத்திய சாதனைகள்
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான குறித்த இரு வீரர்களின் சமீபத்திய சாதனைகள் மீண்டும் பட்டியலில் முதலிடத்தை பிடிக்க வழிவகுத்துள்ளன.
ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்தை எதிர்கொள்ள இந்திய அணி தயாராகி வருகிறது.

ஒருநாள் போட்டி துடுப்பாட்ட தரவரிசையில் கே.எல். ராகுல் இரண்டு இடங்கள் முன்னேறி 12வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதே நேரத்தில் குல்தீப் யாதவ் ஒருநாள் போட்டி பந்துவீச்சு தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும், தென்னாப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்த போதிலும், குயின்டன் டி காக், ஐடன் மார்க்ராம் மற்றும் டெம்பா பவுமா ஆகிய தென்னாப்பிரிக்கா அணி வீரர்களும் முன்னேற்றத்தை தரவரிசையில் பெற்றுள்ளனர்.

