முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய அதானியின் காற்றாலை திட்டம்: புதிய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் புதிய அரசாங்கம், இந்திய அதானி குழுமத்துடனான காற்றாலை மின்சக்தி ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யப்போவதாகக் கூறியுள்ளது.

இது வெளிநாடுகளில், தமது திட்டங்களை விரிவாக்க முயலும் இந்திய அதானி கூட்டுக்கு புதிய தடையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் திட்டங்களில், முந்தைய அரசாங்கம் வழங்கிய மின்சார விலை ஒப்புதல் ஒரு பிரச்சினையாக உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி இறையாண்மை

எனினும், நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் பின்னர், புதிய அரசாங்கம் இந்த ஒப்பந்தத்திற்கு புதிய தோற்றத்தை அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அதானியின் காற்றாலை திட்டம்: புதிய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் | Adani Project In Sri Lanka Anura Gov Rechecks

முன்னதாக அநுரகுமார திஸாநாயக்க, தமது தேர்தல் பிரசாரத்தின் போது, அதானியின் இந்தத் திட்டத்தை இலங்கையின் எரிசக்தி இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியதுடன், அதை இரத்து செய்வதாகவும் உறுதியளித்திருந்தார்.

இந்தநிலையில், ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் தலைமையிலான அதானி குழு, இலங்கையில் பல உட்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்க விரும்புவதால், ஒப்பந்தத்திற்கு எதிரான எந்த சவாலும் கௌதம் அதானியின் இலட்சியங்களுக்கு அடியாக இருக்கும் என்று ப்ளும்பேர்க் குறிப்பிட்டுள்ளது.

 துறைமுக விரிவாக்கம் 

இதில் அமெரிக்க நிறுவனம் ஒன்றின் ஆதரவுடன் கொழும்பு கொள்கலன் – கப்பல் துறைமுகத்தை விரிவாக்குவதும் திட்டமும் உள்ளடங்கும் என்று அந்த செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

இந்திய அதானியின் காற்றாலை திட்டம்: புதிய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் | Adani Project In Sri Lanka Anura Gov Rechecks

எனினும், இது தொடர்பில் கருத்து கேட்டு அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கவில்லை. அத்துடன் கருத்துக்கான கோரிக்கைகளுக்கு அதானி குழுமத்தின் பிரதிநிதியும் உடனடியாக பதில் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி, இலங்கையில் இரண்டு காற்றாலை திட்டங்களை முன்மொழிந்துள்ளார் – ஒன்று மன்னாரிலும் இரண்டாவது மற்றும் பூநகரியிலும் செயற்படவுள்ளன.

இதில், மன்னாரில் செயற்படுத்தப்படவுள்ள திட்டம், வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் என்பது தொடர்பாக சுற்றுச்சூழல் குழுக்களிடமிருந்து நீதிமன்ற சவால்களை எதிர்கொள்கிறது. அத்துடன் இரண்டு திட்டங்களும் வெளிப்படைத்தன்மை இல்லாதது பற்றிய முறைப்பாடுகளையும் எதிர்கொள்கின்றன. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.