முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வதேச பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான தனிப் பிரிவை உடனடியாக நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழாம் திகதி கொழும்பு (Colombo) சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவியொருவர் தாமரைக் கோபுரத்திலிருந்து (Lotus Tower) தவறான முடிவெடுத்து கீழே விழுந்து உயிரிழந்ததையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தேசிய கணக்காய்வு அலுவலகம் (Auditor General’s Department) கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் நிறுவனம் ஒன்று இல்லாத காரணத்தினால் நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கல்வி அமைச்சு

ஆசிரியர்களின் கல்வித் தகுதி, கற்பித்தல் முறை, குழந்தைகளின் ஒழுக்கம், கட்டணம் வசூலிப்பதில் உள்ள முரண்பாடுகள், பாடத்திட்டம் உள்ளடக்காதது போன்ற பல பிரச்சினைகள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம் | Colombo Lotus Tower School Student Death Issue

இந்தப் பிரச்சினைகள் குறித்து கல்வி அமைச்சுக்கு அவ்வப்போது முறைப்பாடுகள் கிடைத்து வந்த நிலையில், இந்த விவகாரத்தை விசாரணை செய்வதற்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லாததால், சம்பந்தப்பட்ட பாடசாலையிடம் மட்டுமே அமைச்சகம் விசாரணை செய்ய முடியும்.

மேலும் தாமரை கோபுரத்தில் இருந்து தவறான முடிவெடுத்து கீழே விழுந்து உயிரிழந்த மாணவி தொடர்பில் இன்று (10.10.2024) அறிக்கை சமர்ப்பிக்குமாறு சர்வதேச பாடசாலைக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு ஆலோசனை

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் நியமிக்கப்பட்ட குழு உள்ளிட்ட அதிகாரிகள் குழு இன்று பாடசாலைக்கு செல்லவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம் | Colombo Lotus Tower School Student Death Issue

இக்குழுவினர் குறித்த பாடசாலையில் தற்போதுள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சிகள், அதற்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கின்றார்களா, மாணவர்களின் செயற்பாடுகள் போன்றவற்றை முழுமையாக கண்காணிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.