முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரிலுள்ள இரு மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு கட்டளை பிறப்பிப்பு

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மற்றும் மன்னார் சதோச மனித புதைகுழி ஆகிய இரு மனித புதைகுழிகள் தொடர்பான
விசாரணைகளும் இன்று (16) விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரைஞ்சன் தெரிவித்துள்ளார். 

குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கையில்,

“மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வைத்தியர்
வி.எல்.வைத்திய ரெட்ண, சி.ஐ.டி. உத்தியோகத்தர்களும், காணாமல்
ஆக்கப்பட்டோர் சார்பான சட்டத்தரணிகளும், அரச சட்டத்தரணிகளும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

சீ-14 பரிசோதனை

இதன்போது, ஏற்கனவே மனித எச்சங்களில் இருந்து பகுப்பாய்விற்கு பிரித்து
எடுக்கப்பட்ட மாதிரிகள் நீதிமன்ற கட்டுக் காவலில் இருப்பதாகவும், அதனை சீ-14
பரிசோதனைக்காக புலோரிடாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளுக்காக இன்று வைத்தியரினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மன்னாரிலுள்ள இரு மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு கட்டளை பிறப்பிப்பு | Investigation Case Of Two Human Burials In Mannar

அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிமன்றத்தினால் கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

அத்தோடு வைத்தியர் கேவகையினால் ஏற்கனவே எடுக்கப்பட்ட மனித எச்சங்களின்
மாதிரிகளுக்கான அறிக்கை இன்றைய தினம் மன்றில்
சமர்ப்பிக்கப்பட இருந்தன. 

எனினும், அவர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத
காரணத்தினால் குறித்த அறிக்கையை எதிர்வரும் மாதம் 21ஆம் திகதி தாக்கல் செய்வதாக தவணை எடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் குறித்த அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படும். அத்தோடு அந்த மாதிரிகள் சீ-14 பரிசோதனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள்
அன்றையதினம் அறிவிக்கப்படும். இந்த நிலையில் குறித்த திருக்கேதீஸ்வர மனித
புதைகுழி வழக்கு மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி அழைக்கப்படவுள்ளது.

மன்னாரிலுள்ள இரு மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு கட்டளை பிறப்பிப்பு | Investigation Case Of Two Human Burials In Mannar

மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பான விசாரணை மற்றும் வழக்கு இந்த மாதம் 7ஆம் திகதியில்
இருந்து 11ஆம் திகதி வரை வைத்தியர் ராஜபக்ச  குழுவினராலும், ராஜ் சோமதேவ
குழுவினராலும் ஏற்கனவே மனித புதைகுழியில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு
பொதி பொதி செய்யப்பட்டு நீதிமன்ற கட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள பொதிகளில்
இருந்து மனித எலும்புக் கூட்டுத் தொகுதி தனியாகவும், அதனுடன் எடுக்கப்பட்ட பிற
பொருட்கள் தனியாகவும் குறிப்பிட்ட 5 நாட்கள் நீதிமன்ற வளாகத்தில் வைத்து பிரித்து
எடுக்கப்பட்டு, பொதி செய்யப்பட்டன.

பிற பொருட்கள் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினராலும், மனித எலும்புகள் ராஜபக்ச தலைமையிலான குழுவினராலும் பிரித்து எடுக்கப்பட்டு பொதி
செய்யப்பட்டது.

மன்னாரிலுள்ள இரு மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு கட்டளை பிறப்பிப்பு | Investigation Case Of Two Human Burials In Mannar

வைத்தியர் ராஜ் சோமதேவவினால் சதோச மனித புதைகுழியை
சுற்றி நான்கு இடங்களில் பரீட்சார்த்தமாக தோண்டிப்பார்த்து ஆய்வுகள்
முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அவ்வாறு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற கட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த குறித்த
பொதிகள் தொடர்பான விசாரணை இன்று மன்னார் நீதிமன்றத்தில்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீதிமன்றின் உத்தரவு 

இதன்போது, அரச சட்டத்தரணிகள், காணாமல் போனார் அலுவலக உத்தியோகத்தர்கள், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகும்
சட்டத்தரணிகள் ஆகியோர் மன்றில் முன்னிலை இருந்தனர். நீதிமன்றத்தினால்
சில கட்டளைகள் ஆக்கப்பட்டது.

வைத்தியர் கோவையினால் பகுப்பாய்வு செய்யப்பட இருக்கின்ற மனித எச்சங்கள் இறப்புக்கான காரணம், பாலினம், அதற்கான வயதெல்லை போன்ற விடயங்கள் சம்மந்தமான
அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க இடவசதிகள் காணாமல்
உள்ளமையினால் நீதிமன்றத்தில் இருந்து ஒரு கட்டளை ஒன்றை ஆக்குமாறு
கேட்கப்பட்டது.

மன்னாரிலுள்ள இரு மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு கட்டளை பிறப்பிப்பு | Investigation Case Of Two Human Burials In Mannar

அதற்கான கட்டளை இன்று மன்னார் நீதிமன்றத்தினால்
வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அத்தோடு ராஜ் சோமதேவவும் எடுக்கப்பட்ட
பிற பொருட்களில் இருந்து அதற்கான காலப்பகுதி என்னவாக இருக்கும் என்ற
அறிக்கையையும் சமர்ப்பிக்க கேட்கப்பட்டிருந்தது.

அது மாத்திரமன்றி, மேலதிகமாக சதோச மனித புதை குழியை மீண்டும் தோண்ட வேண்டுமா? அல்லது
அதனை பாதுகாக்க வேண்டுமா? என்பது தொடர்பான அபிப்பிராயங்களை பேராசிரியர் ராஜ்
சோமதேவ மற்றும் சட்ட வைத்தியர் ராஜபக்ச ஆகியோரினால் அறிக்கை ஒன்றை
எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணைகள் மீண்டும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெற
உள்ளன. அத்தோடு, அந்த பொருட்களை உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.