முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு இன்று (25) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மொஹமட் லபார் தாஹிர் மற்றும் பி. குமரன் ரத்தினம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிறப்பித்துள்ள உத்தரவு

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு (Johnston Fernando) எதிராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தாக்கல் செய்த வழக்கொன்றினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Order On Ex Mp Johnston S Petition

குறித்த வழக்கு நேற்றையதினம் (24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்த கருத்து காரணமாக தனக்கு ஏற்பட்ட நற்பெயருக்கு களங்கம் இழைக்கப்பட்டதால் 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் பதிவு செய்யப்படாத காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று முன் தினம் (23) உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.