2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 14.4 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை ஏற்றுமதி மேம்பாட்டு சபை (Export Development Board) தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் 6 சதவீத நிலையான முன்னேற்றத்தையும் கண்டுள்ளதாக அந்த சபை குறிப்பிடுகிறது.
சுங்கம் வெளியிட்ட தகவல்
இலங்கை சுங்கத்துறை வெளியிட்ட தரவுகளின்படி, இரத்தினக் கற்கள், நகைகள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட புள்ளிவிபரங்களுடன் சேர்த்து, மொத்த ஏற்றுமதி வருமானம் 14,433.82 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட ஒப்பீட்டளவில் அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
மேலும் ஒரு வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஏற்றுமதி வருமானம் 14 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியது இதுவே முதல் முறை என கூறப்படுகின்றது.
இதேவேளை, இந்தக் காலகட்டத்தில், தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி முதல் முறையாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

