மட்டக்களப்பு – ஈழத்து திருச்செந்தூர்
மட்டக்களப்பு, ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் கந்தசஸ்டி விரதத்தின் சூரசம்ஹார
நிகழ்வு நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றுள்ளது.
ஈழத்து திருச்செந்தூர் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு ,திருச்செந்தூர் முருகன்
ஆலயத்தில் கந்த சஸ்டி விரதம் கடந்த 02ஆம் திகதி
சனிக்கிழமை ஆரம்பமானது.
முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன்
கந்தசஸ்டி விரதத்திற்கான கும்பம் வைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றுவந்தன.
ஐந்து தினங்கள் பக்தர்கள் விரதமிருந்து கந்தசஸ்டி விரதம் அனுஸ்டித்ததுடன்
தினமும் ஆலயத்தில் கந்தபுராண படலம் பாடும் நிகழ்வும் நடைபெற்றது.
இதனையடுத்து, இன்று பிற்பகல் சூரசம்ஹாரத்திற்கான வேல் கல்லடி முத்துமாரியம்மன் ஆலயத்தில்
பெற்றுக்கொண்டு வேல்படையானது ஆலயத்தினை ஊர்வலமாக வந்தடைந்து.
அதனை தொடர்ந்து
சூரனை வதம் செய்யும்போது நடைபெற்ற நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில்
சூரன்போர் நடாத்தப்பட்டது.
செய்தி – குமார்
மாத்தளை நாட்டுக்கோட்டை ஆலயம்
சரவணப் பொய்கையில் ஆறு திருமுகங்களுடன் அவதரித்த முருகனை நோக்கி ஆறு தினங்களுக்கு அனுஷ்டிக்கப்படும் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாள் இன்றாகும்.
அந்த வகையில் இன்று, முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஆலயங்களில் சூரன் போர் இடம்பெற்று வருகிறது.
முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டியும், எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டியும், சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது போர் செயலானான். சூரன் போர் செய்த ஒவ்வொரு தினமும் தனது ஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்த கதையே சூரன் போராக இந்து ஆலயங்களில் இடம்பெற்று வருகிறது.
இதன்படி மாத்தளை நாட்டுக்கோட்டை நகரத்தார் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திலும் சூரன் போர் விழா லங்காசிறி ஊடக அனுசரணையுடன் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
தமிழர்களின் கலாசார பண்பாட்டு இசைவாத்தியங்கள் முழங்க ஊர்வலம் நடைபெறுவதோடு சூரன் போர் நடாத்தப்படுகிறது.