Courtesy: Sivaa Mayuri
பிரிக்ஸ் (BRICS )அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம், ரஷ்யாவின் தலைமையின் கீழ் ஏனைய நாடுகளுடன் இணைந்து பரிசீலிக்கப்படும் என்று ரஷ்ய (Russia) தூதரகம் தெரிவித்துள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் தலைவர் என்ற வகையில் ரஷ்யா, இலங்கையின் விண்ணப்பத்தை வரவேற்பதாகவும், அது நிராகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமைப்பில் சேருவதற்கான கோரிக்கை
முன்னதாக, ரஷ்யாவில் நடைபெற்ற அண்மைய உச்சிமாநாட்டில், பிரிக்ஸ் அமைப்பில் சேருவதற்கான கோரிக்கையை இலங்கை பதிவு செய்திருந்தது.
இதன்போது. இந்த விண்ணப்ப விடயத்தில், இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு உறுப்பு நாடுகளிடம், மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ( Vijitha Herath) சார்பாக கோரிக்கை விடுத்திருந்தார்.
ரஷ்;ய ஜனாதிபதியின் கீழ், பிரிக்ஸ் அமைப்பு ஸ்தாபக நாடுகளான பிரேசில், இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா என்பவற்றுடன் இணைந்து 2024 அக்டோபர் 22 முதல் 24 வரை ரஷ்யாவின் கசானில் உச்சிமாநாட்டை நடத்தியது.