உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான A380, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பயணி ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து, இவ்வாறு விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வான்வெளி
துபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்குச் சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானம் EK-434, இலங்கை வான்வெளியில் இருந்தபோது விமானத்தில் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று(20.11) இரவு 7.15 மணியளவில் கட்டுநாயக்கவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக அவசர நெறிமுறைகளை செயல்படுத்தி, விமானம தரையிறங்கியவுடன் பயணி வெளியேற்றப்பட்டு அவசர மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தேவையான அனுமதி வழங்கப்பட்டவுடன், விமானம் கட்டுநாயக்கவிலிருந்து பிரிஸ்பேனுக்கு அதன் பயணத்தை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source – Dailymirror

