பொருளாதார நலன்களை முன்னிட்டு தான் சுவிட்சர்லாந்தும் மன்னாரில் கள ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் கலாநிதி அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மன்னார் பகுதியிலே கடந்த ஒரு வருடமாக சுவிட்சர்லாந்தின் நடவடிக்கை தீவிரமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சுவிட்சர்லாந்து அமெரிக்காவின் மேற்குலகத்தின் வங்கி முகவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் அமெரிக்கா எந்தவித சம்மந்தமும் இல்லாதது போல் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மன், இஸ்ரேல் போன்ற நாடுகள் கூட்டு முறயற்சியாக தான் ஒரு திட்டத்தை வகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,

