ஐந்து வருட நாடாளுமன்ற பதவியில் தான் இரண்டரை வருடங்களே நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கப்போவதாக வைத்தியர் அரச்சுனா (Dr. archuna) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டரை வருடங்களே நாடாளுமன்ற உறுப்பினராக பதவி
இரண்டரை வருடங்களே நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பேன். பின்னர் மாகாண சபை தேர்தலில் களமிறங்கவுள்ளேன். மிகுதி இரண்டரை வருடங்களுக்கு எனது செயலாளர் சட்டத்தரணி கௌசல்யா நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பார்.
இரண்டரை வருடங்களில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவது நடைபெறப்போகும் மாகாண சபைத் தேர்தலில் தெரியவரும்.
ஏழை தமிழ் மக்களுக்கு நன்றி
முக்கியமாக நான் ஏழை தமிழ் மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.அத்துடன் நான் உறுதியளித்த விடயங்களை செய்து முடிப்பேன்.
நான் வலிகாமத்தை சொந்த இடமாக கொண்டிருந்தாலும் சாவகச்சேரியே(chavakachcheri) எனது கோட்டை.சாவகச்சேரி மக்களின் அன்பை ஒருபோதும் மறக்க முடியாது.
தற்போது யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் தமிழர் என நிற்பது நான் உட்படசிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர்தான்.அவர்களிடம் பகிரங்கமாக நான் கூறுவது என்வென்றால் கட்சியாக இல்லாமல் இணைந்து செயற்படுவது என்றால் நான் தயாராகவே உள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.